/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நூற்றாண்டு பழமையான விநாயகர் சிலை திருட்டுநூற்றாண்டு பழமையான விநாயகர் சிலை திருட்டு
நூற்றாண்டு பழமையான விநாயகர் சிலை திருட்டு
நூற்றாண்டு பழமையான விநாயகர் சிலை திருட்டு
நூற்றாண்டு பழமையான விநாயகர் சிலை திருட்டு
ADDED : செப் 04, 2011 02:23 AM
தியாகதுருகம்:தியாகதுருகம் அருகே நூற்றாண்டு பழமையான விநாயகர் சிலையை மர்ம
நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தியாகதுருகம் அடுத்த கணங்கூரில் சாத்தனூர் செல்லும் சாலையோரம் நூற்றாண்டு
பழமையான குளத்துமேட்டு விநாயகர் கோவில் கருவறையில் உள்ள விநாயகர் சிலையை
சுழற்றி திருப்பும் வகையில் உள்ளது. குழந்தை இல் லாதவர்கள் கோவிலில்
கிழக்குதிசை நோக்கியுள்ள விநாயகர் சிலையை மேற்கு நோக்கி திசையில் வைத்து
பூஜை செய்வர். குழந்தை பிறந்ததும் மீண்டும் கோவிலுக்கு சென்று இருவரும்
சேர்ந்து விநாயகர் சிலையை கிழக்கு திசையில் திருப்பி வைத்து சிறப்பு
வழிபாடு நடத்துவர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 1ம் தேதி
பக்தர்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.நேற்று காலை கணங்கூரை
சேர்ந்த தங்கராஜ் கோவி லுக்கு சென்ற போது கருவறையில் விநாயகர் சிலை
இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.தகவலறிந்த அப்பகுதி மக்கள் கோவில் முன்
திரண்டனர்.வரஞ்சரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நூற்றாண்டு பழமையான
விநாயகர் சிலை திருடு போன சம்பவம் கணங்கூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


