/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மோதி சேதம்மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மோதி சேதம்
மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மோதி சேதம்
மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மோதி சேதம்
மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மோதி சேதம்
ADDED : ஜூலை 27, 2011 01:15 AM
புதுச்சேரி : மீன்பிடித் துறைமுகத்தின் கற்கள் நிறைந்த பகுதியில் விசைப்படகு விபத்துக்குள்ளாகி சேதமடைந்தது.
நல்லவாடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி.
இவரது விசைப் படகில் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து நல்லவாடு மற்றும்
கீரப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித், துரை, ராஜவேலு, அரவிந்து, சந்திரசேகர் ஆகியோர்
25ம் தேதி காலை 6 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அன்றைய தினம் இரவு 9.15 மணிக்கு
தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்குத் திரும்பினர். துறைமுக பகுதியில் விளக்குகள்
இல்லாததால் கற்கள் கொட்டிய பகுதியில் படகு தரை தட்டி சேதமடைந்தது. மீனவர்கள் கடலில்
குதித்து தப்பித்து கரைக்கு வந்தனர். வேறு படகுகளில் சென்று வலைகள் மற்றும்
மீன்கள் உள்ளிட்ட பொருட்களைக் கரைக்குக் கொண்டு வந்தனர். நேற்று காலை மீனவர்கள்
கிரேன் உதவியுடன் சேதமடைந்த விசைப்படகை மீட்டனர். அலைகள் அடித்ததால் விசைப்படகு
கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கற்களில் இடித்து முற்றிலும் சேதமடைந்தது. இதனை
மீன்வளத்துறை துணை இயக்குனர்கள் இளங்கோ (இயந்திரப்பிரிவு), தனசேகரன் ஆகியோர்
பார்வையிட்டனர். சேதமடைந்த விசைப்படகின் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும்.