ADDED : அக் 07, 2011 10:33 PM
சிவகாசி : சிவகாசி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடும் கே.வி.கே.சித்ரா, விஸ்வநத்தம் ஓ.பி.ஆர்.நகர் பகுதியில் ஓட்டு சேரித்தார்.அப்பபோது அவர் பேசியதாவது:மெயின் ரோட்டில் இருந்து ஓ.பி.ஆர்.நகர் வரை முறையான சாலைகள் மற்றும் தெருவிளக்குகள் இல்லை.
இரவு நேரங்களில் செல்ல இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். என்னை வெற்றி பெறச் செய்தால் சாலை மற்றும் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வாறுகால்கள் சரியாக சுத்தம் செய்யாததால் ,கழிவு நீர் க தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. துப்புரவு தொழிலாளர்களை கூடுதல் எண்ணிக்கையில் பணியில் அமர்த்தி, முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.சரியாக செயல்படுத்தாத மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி, கோடையிலும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்வேன், என்றார். உடன் கே.வி.கந்தசாமி சென்றார்.


