/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அபிராமி மருத்துவமனையில் சர்வதேச தாய்ப்பால் வார விழாஅபிராமி மருத்துவமனையில் சர்வதேச தாய்ப்பால் வார விழா
அபிராமி மருத்துவமனையில் சர்வதேச தாய்ப்பால் வார விழா
அபிராமி மருத்துவமனையில் சர்வதேச தாய்ப்பால் வார விழா
அபிராமி மருத்துவமனையில் சர்வதேச தாய்ப்பால் வார விழா
ADDED : ஆக 03, 2011 11:02 PM
கோவை : சர்வதேச தாய்ப்பால் வாரம், சுந்தராபுரத்தில் உள்ள ஸ்ரீ அபிராமி மருத்துவமனையில், வரும் 7ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆக., 1 முதல் 7ம் தேதி வரை சர்வதேச தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள ஸ்ரீ அபிராமி மருத்துவமனையில் வரும் 7ம் தேதி வரை தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து விளக்கப்படுகிறது. தாய்ப்பால் மகத்துவம் குறித்த தகவல்கள், விளக்கப்படங்கள், தாய்க்கு ஏற்படும் பலன்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள், உணவு முறைகள் குறித்த கண்காட்சியும் நடக்கிறது. இத்துடன், 'தாய்மையின் அருவி' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் சிறப்புரையாற்றும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரியில் உள்ள ஹேமாம்பிகை திருமண மண்டபத்தில் வரும் 6ம் தேதி மாலை 6.00 மணிக்கு நடக்கிறது. மருத்துவமனை வளாகத்தில் நடந்த சர்வதேச தாய்ப்பால் வார துவக்க விழாவில், மருத்துவமனை தலைவர் டாக்டர் பெரியசாமி, இயக்குனர் டாக்டர் குந்தவி தேவி, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில்குமார், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் உமாதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


