/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி ஆசிரியருக்கு கல்வித்திலகம் விருதுதிருச்சி ஆசிரியருக்கு கல்வித்திலகம் விருது
திருச்சி ஆசிரியருக்கு கல்வித்திலகம் விருது
திருச்சி ஆசிரியருக்கு கல்வித்திலகம் விருது
திருச்சி ஆசிரியருக்கு கல்வித்திலகம் விருது
ADDED : செப் 06, 2011 12:02 AM
திருச்சி: திருச்சி கி.ஆ.பெ., விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியருக்கு, பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் 'கல்வித்திலகம்' விருது வழங்கப்பட்டது.
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பாக, ஆசிரியர் தினவிழா மற்றும் கல்வித் தொண்டாற்றும் ஆசிரியருக்கு 'கல்வித்திலகம்' விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ராமராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு மாணவர்களை ஓவியப் போட்டியில் பங்கேற்க வைத்து, சிறப்பாக பணியாற்றிய, திருச்சி கி.ஆ.பெ., விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் முகமது மக்தூம்க்கு, லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் ஷேக் தாவூத், 'கல்வித்திலகம்' விருது வழங்கினார். விருதுப்பெற்ற ஓவிய ஆசிரியரை, பள்ளித்தலைவர் டாக்டர் ஜெயபால், தாளாளர் டாக்டர் கேசவராஜ், தலைமையாசிரியர் ஞானப்பிரகாசம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.


