ADDED : அக் 11, 2011 01:56 AM
திண்டிவனம் : திண்டிவனம் ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.
திண்டிவனம் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு முன்னாள் துணை பதிவாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ரயில்வே சிக்னல் செக்ஷன் அலுவலர் வேணுகோபால், பொறியாளர் உதயகுமார் முன்னிலை வகித் தனர். பாபுராஜன் தாஸ் வரவேற்றார். ராம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் தியாகராஜன், டாக்டர் சண்முகசுந்தரம், வியாபாரிகள் சங்க தலைவர் கல்கண்டு சுந்தரம் ஆகியோர் சங்க உறுப்பினர்களுக்கு அடை யாள அட்டைகளை வழங்கினர். திண்டிவனத்தில் சீசன் டிக்கெட் பெற வசதி செய்ய வேண்டும். ரயில் நிலையத்தில் கேன்டீன், குடிநீர், சுகாதார வசதிகள் செய்து தர வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள் லட்சுமிநாராயணன், கபில், சண்முகம், சுந்தர், செந்தில்குமார், மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


