போலீசாரின் தபால் ஓட்டு : விவரம் சேகரிப்பு
போலீசாரின் தபால் ஓட்டு : விவரம் சேகரிப்பு
போலீசாரின் தபால் ஓட்டு : விவரம் சேகரிப்பு
ADDED : அக் 07, 2011 09:50 PM
பழநி : உள்ளாட்சித் தேர்தலில், போலீசார் தபால் ஓட்டளிப்பதில் ஏற்படும் குளறுபடியை தவிர்க்க, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்டசபைத் தேர்தலில், 'சப் டிவிஷன்' வாரியாக, போலீசாரிடம் இருந்து தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. சில இடங்களில் இவற்றை முறையாக சேர்க்கவில்லை என, புகார் எழுந்தது.
உள்ளாட்சித் தேர்தலில், இது போன்ற குளறுபடியை தவிர்க்க, ஸ்டேஷன் வாரியாக ஓட்டுரிமை உள்ள போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் ஓட்டுரிமை உள்ள பகுதிகள் குறித்த தகவல்கள், இதில் உள்ளன. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., போலீசார் என, தனித்தனியாக தகவல் சேகரிக்கப்படுகிறது.


