/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு எச்சரிக்கைஅனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு எச்சரிக்கை
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு எச்சரிக்கை
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு எச்சரிக்கை
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 28, 2011 12:47 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் அனுமதியின்றி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை போலீசார் எச்சரிக்கை விடுத்து கலைத்தனுப்பினர்.பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் நேற்று காலைதி.மு.க.,வினர் மாணவர்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்தனர்.
சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி தி.மு.க., நடத்தும் போராட்டத்திற்கு அழைப்பு கொடுத்து நோட்டீஸ் சப்ளை செய்தனர். இந்நிலையில், தி.மு.க., நகர செயலாளர் செல்வராஜ், நகராட்சி கவுன்சிலர் கண்ணன் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சமச்சீர்கல்வி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசை விமர்சித்தும் கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.,வினருக்கு எச்சரிக்கை விடுத்து கலைத்து அனுப்பினர். இதனால், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக பரபரப்பு ஏற்பட்டது.


