/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கி ரூ.1.16 லட்சம் பறிப்புபெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கி ரூ.1.16 லட்சம் பறிப்பு
பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கி ரூ.1.16 லட்சம் பறிப்பு
பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கி ரூ.1.16 லட்சம் பறிப்பு
பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கி ரூ.1.16 லட்சம் பறிப்பு
ADDED : ஆக 12, 2011 10:56 PM
தேன்கனிக்கோட்டை: தளி அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கி ஒரு லட்சத்து
16 ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
தளி அடுத்த ஒசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அனந்தரெட்டி (48). இவர் தளியில்
பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். தினம் பங்கில் வசூலாகும் பணத்தை அனந்த ரெட்டி
ஒசபுரத்திற்கு எடுத்து செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் இரவும்
வழக்கம்போல் அனந்தரெட்டி பங்கில் வசூலான ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை
எடுத்துக்கொண்டு நண்பர் கோபால் என்பவருடன் பைக்கில் ஒசபுரம் நோக்கி
சென்றுள்ளார்.
தளி பெட்டப்பள்ளி சாலையில் செல்லும்போது எதிரே வந்த பைக்
அனந்தரெட்டி ஓட்டி வந்த பைக் மீது மோதியது.இதில், நிலை தறுமாறி கீழே
விழுந்த இருவரையும் மர்ம நபர்கள் உருட்டு கட்டையால் தாக்கி
அனந்தரெட்டியிடம் இருந்த ஒரு லட்சத்து 16 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு
அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயமடைந்த அனந்தரெட்டி மற்றும் கோபால்
ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தளி
போலீஸார் விசாரித்து, பணம் பறித்தவர்களை தேடி வருகின்றனர்.


