ADDED : ஆக 11, 2011 09:19 PM
திருநெல்வேலி: இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவை நிறுத்தக்கோரி, நாளை (ஆக.
12) பார்லி., முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து நாடுகள் மன்றத்தில், சிங்கள அரசுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவு போக்கை நிறுத்தக்கோரியும், இன கொலை குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்த குரல் கொடுத்திடக்கோரியும், பார்லிமென்ட் முன்பாக நாளை காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


