/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நல்லவர்கள் ஒதுங்குவதால்சுவிஸ் வங்கிக்கு பணம்நல்லவர்கள் ஒதுங்குவதால்சுவிஸ் வங்கிக்கு பணம்
நல்லவர்கள் ஒதுங்குவதால்சுவிஸ் வங்கிக்கு பணம்
நல்லவர்கள் ஒதுங்குவதால்சுவிஸ் வங்கிக்கு பணம்
நல்லவர்கள் ஒதுங்குவதால்சுவிஸ் வங்கிக்கு பணம்
ADDED : ஆக 20, 2011 11:28 PM
கோவை:'அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்கி கொள்வதால், சுவிஸ் வங்கிக்கு
பணம் செல்கிறது' என, காந்திய மக்கள் இயக்க மாநில துணைத்தலைவர் கந்தசாமி
பேசினார்.அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கோவை
செஞ்சிலுவை சங்கம் முன், காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நேற்று
ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊழல் ஒழிந்திட, அன்னா ஹசாரே ஜனலோக்பால் திட்டத்தை
சட்டமாக்குதல்; ஈழத்தில் வாழும் தமிழர்கள் சுய உரிமை பெற்றிட மத்திய மாநில
அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
குழந்தைகளும் ஆர்வமுடன் பங்கேற்று, கோஷம் எழுப்பினர். காந்திய மக்கள் இயக்க
மாநில துணைத்தலைவர் கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது:நல்லவர்கள் எல்லாம்
அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய
மக்கள் பிரதிநிதிகள், தனக்கு மற்றும் தன் குடும்பத்திற்கு சொத்து
சேர்த்துக் கொள்கின்றனர். ஏழைகளுக்கு செல்ல வேண்டியதை, சுவிஸ் வங்கிக்கு
கொண்டு சென்றுவிட்டனர். இனியும் பொறுக்க முடியாது; எரிதணலை கொண்டுவர
வேண்டும்.
தூய்மையான அன்னா ஹசாரே பின்னால், எங்களது உணர்வுகளை
வெளிப்படுத்துகிறோம். மானமுள்ளவர், அநியாயத்தை தட்டிக்கேட்பர்.பணம்,
அரசியல் வலிமை உள்ளவர்களால் மட்டும், தேர்தலில் சீட் கிடைக்கும் என்ற சூழல்
உள்ளது. தேர்தலின் போது மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். இலங்கையில்
நடக்கும் அட்டூழியத்தை பார்த்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் கண்டனம்
தெரிவிக்கின்றன. ஆனால், இந்தியா கண்டிக்க மறுக்கிறது. சிங்களத்
தமிழர்களுக்கு மீண்டும் ஒரு விடிவு வேண்டும். ஐ.நா., சபை சார்பில், இலங்கை
தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பொருளாதார தடைவிதிக்க கோரிய
மாநில அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு, கந்தசாமி
பேசினார்.காந்திய மக்கள் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவராஜ், மாவட்ட
செயலாளர் கணேஷ், நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், திருமலைராஜா உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.


