ADDED : ஜூலை 19, 2011 12:38 AM

சென்னை : எம்.ஜி.ஆர்., மன்ற செயலராக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றச் செயலர் பொறுப்பிலிருந்து தமிழ் மகன் உசேன் விடுவிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆர்., மன்ற செயலராக அவர் நியமிக்கப்படுகிறார்.சேலம் புறநகர் மாவட்ட அவைத்தலைவராக குருசாமி, மாவட்ட பொருளாளராக மாதேசன், மாவட்ட இணை செயலராக அமுதா, மாவட்ட துணைச் செயலர்களாக தங்கமணி, பெரியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம், ஜெயலலிதா பேரவை, மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவு, மீனவர் பிரிவு, விவசாய பிரிவு, அமைப்பு சார ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட அமைப்பிற்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.