Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரயிலில் கிடந்த இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு

ரயிலில் கிடந்த இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு

ரயிலில் கிடந்த இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு

ரயிலில் கிடந்த இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு

ADDED : செப் 06, 2011 10:31 PM


Google News

சென்னை: புதுச்சேரியிலிருந்து, சென்னை வந்த பயணிகள் ரயிலை, நேற்று முன்தினம் இரவு, பராமரிப்புக்கான யார்டுக்கு கொண்டு சென்று பெட்டிகளைச் சுத்தம் செய்தபோது, ஒரு பெட்டியில், இரு ஐம்பொன் சிலைகள் கிடந்தன.

ஊழியர்கள், எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று, ஐம்பொன்னால் ஆன, முக்கால் அடி உயரமுள்ள, அம்மன் சிலை, ஒரு அடி உயரமுள்ள, சிவன்-பார்வதி சிலையை மீட்டனர். இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கலாம் எனத் தெரிகிறது. 'கைப்பற்றிய சிலைகள் இரண்டும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை தொடரும்' என, போலீசார் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us