/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் தற்கொலைவெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் தற்கொலை
ADDED : ஜூலை 14, 2011 11:32 PM
ஓசூர்: ஓசூர் அருகே ஒரே நாளில், வெவ்வெறு சம்பவங்களில் இரு பெண்கள் தற்கொலை செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கொடுக்கல் குப்பம் மேல் மலையனூரை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஜோதி (21). இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு நந்தினி (4) என்ற பெண் குழந்தை உள்ளது. ஓசூர் அடுத்த பேரிகையில் உள்ள கெமிக்கல் கம்பெனியில், நந்தகுமார் பணிபுரிந்து வருகிறார். நந்தகுமார் குடும்பம் நடத்த, பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை கேட்டு கடனக்காரர்கள் நெருக்கெடி கொடுத்தனர். கடனை அடைக்க மனைவியின் நகைகளை நந்தகுமார் கேட்டுள்ளார். அதற்கு ஜோதி மறுத்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. மனமுடைந்த ஜோதி, வீட்டில் நேற்று முன்தினம் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். பேரிகை போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். * ஹட்கோ அடுத்த ஏ.சாமனப்பள்ளியை சேர்ந்தவர் சின்ன அப்பையா. இவரது மனைவி கவுரம்மா(60). இவர் கடந்த சில மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன் தினம் வலி தாங்க முடியாமல், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். ஹட்கோ போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


