Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/30 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராத கிணற்றை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

30 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராத கிணற்றை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

30 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராத கிணற்றை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

30 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாராத கிணற்றை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

ADDED : அக் 13, 2011 05:31 AM


Google News
செய்துங்கநல்லூர்:முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராமல் இருக்கும் குடிநீர் கிணற்றை பராமரிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கருங்குளம் யூனியன் ஆறாம்பண்ணை கிராமத்தின் அருகில் உள்ளது நடுவக்குறிச்சி கிராமம். மணக்கரை பஞ்.,யைச் சேர்ந்த இக்கிராமம் நான்கு புறமும் நஞ்சை வயல்கள் சூழ்ந்திருப்பதால் தீவு போல் காட்சி அளிக்கும். இக்கிராமத்திற்கு ஆறாம்பண்ணையிலிருந்து வாய்கால் கரை ஓரமாக ஒரு பாதை செல்கிறது. இதுதான் இக்கிராமத்திற்கு செல்லும் வழி. இதில் ஏதேனும் பிரச்னை என்றால் வேறு வழி கிடையாது. இந்த பாதை சீராக இல்லை. கார், வேன்கள் செல்ல முடியாத அளவு குறுகலாக உள்ளது. மேலும் கல் ரோடு கூட இல்லாமல் உள்ளது. இக்கிராமத்தின் அருகில் தாமிரபரணி ஆறு செல்வதால் அங்கிருந்து குடிநீர் பெற பஞ்.,நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆற்றிலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் ஒரு உறைகிணறு அமைத்து அங்கிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வழியாக தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்தக் கிணறு பராமரிப்பின்றி பாதுகாக்கப்படாமல் உள்ளது.

இதனால் அங்கு உறிஞ்சப்படும் தண்ணீர் மாசுப்பட்டுவிட்டதாக கிராம மக்கள் கருதுகின்றனர். எனவே தங்களுக்கு தேவையான குடிநீரை இக்கிராம மக்கள் பக்கத்து ஊரான ஆறாம்பண்ணைக்கு சென்று எடுத்து வருகின்றனர். எத்தனையோ முறை அரசு அதிகாரிகளுக்கும், பஞ்.,நிர்வாகத்திற்கும் இதுகுறித்து புகார் செய்தும் எந்த பலனும் இல்லையாம்.

மேலும் இங்குள்ள மின் கம்பங்கள் பழமையானதால் அடிக்கடி கரண்ட் கட் ஆவதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த தேர்தல் சமயத்திலாவது இக்குறைகள் நிவர்த்தி செய்ய யாராவது பொறுப்பேற்க வேண்டும் என இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us