/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புத்தூரில் பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பிற்கு முக்கியத்துவம் : அ.தி.மு.க.,வேட்பாளர் தகவல்திருப்புத்தூரில் பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பிற்கு முக்கியத்துவம் : அ.தி.மு.க.,வேட்பாளர் தகவல்
திருப்புத்தூரில் பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பிற்கு முக்கியத்துவம் : அ.தி.மு.க.,வேட்பாளர் தகவல்
திருப்புத்தூரில் பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பிற்கு முக்கியத்துவம் : அ.தி.மு.க.,வேட்பாளர் தகவல்
திருப்புத்தூரில் பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பிற்கு முக்கியத்துவம் : அ.தி.மு.க.,வேட்பாளர் தகவல்
ADDED : செப் 30, 2011 01:22 AM
திருப்புத்தூர் : திருப்புத்தூரில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்கவும்,பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பிற்கும், அடிப்படை பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்று பேரூராட்சிதலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
வேட்புமனுத்தாக்கல் செய்த பின் அவர் கூறியதாவது : பேரூராட்சி குடிநீர் திட்டத்தில் 16 லட்சம் லிட்டர் சப்ளை செய்ய முடியும். ஆனால் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. விரைவாக குடிநீர் இணைப்பு வழங்கி முழுமையாக பயன்படுத்தப்படும். பஸ் ஸ்டாண்ட்டை இரண்டு அடுக்கில் அதே இடத்தில் விஸ்தரிக்கவும் முயற்சி செய்வேன்.
அரசின் நலத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் சேர்ப்பேன்.தினசரி மக்களிடம் புகார் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.அரசின் திட்டமான பேரூராட்சிகளில் பாதாளசாக்கடைத்திட்டம் நிறைவேற்ற பாடுபடுவேன்' என்றார். மாவட்ட வக்கீல் பிரிவு செயலர் முத்துகிருஷ்ணன், நகர் செயலாளர் அசோகன், ஜெ பேரவைசெயலர் இப்ராம்சா, துணைச் செயலர் பிரேம்குமார், வக்கீல் லியாகத் அலிகான், முன்னாள் துணை செயலர் சையது, இளைஞர் அணி நகர் தலைவர் ஆனந்த் இளைஞர் அணி அப்துல் வாஹித், எம்.ஜி.ஆர்.மன்றம் கருணாகரன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.