/உள்ளூர் செய்திகள்/மதுரை/சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.6 உயர்வுசமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.6 உயர்வு
சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.6 உயர்வு
சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.6 உயர்வு
சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.6 உயர்வு
ADDED : ஜூலை 13, 2011 04:14 AM
மதுரை:சமையல் எண்ணெய் மீதான வரிவிலக்கு வரம்பு ஆண்டு விற்பனை ரூ.500 கோடி
என்பதை, ரூ.5 கோடியாக குறைத்து நேற்று முன் தினம் அரசு உத்தரவிட்டது. இதன்
காரணமாக, மதுரையில் லிட்டருக்கு ரூ.2.60 முதல் ரூ.6 வரை விலை
உயர்ந்துள்ளது.எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி
கூறியதாவது :
டீசல் விலை உயர்ந்தாலும், விலை உயராமல் இருந்த பாமாயில் விலை, அரசு
வரிவிதிப்பால் நேற்று ரூ.52லிருந்து ரூ.54.60 ஆக உயர்ந்தது. தேங்காய்
எண்ணெய் ரூ.104
லிருந்து ரூ.109க்கும், கடலை எண்ணெய் ரூ.95லிருந்து ரூ.99க்கும்,
சூரியகாந்தி எண்ணெய் ரூ.73லிருந்து ரூ.76க்கும் விற்கப்பட்டது. ரைஸ்பிரான்
ஆயில் ரூ.58லிருந்து ரூ.61க்கும், வனஸ்பதி ரூ.59லிருந்து ரூ.62க்கும்,
நல்லெண்ணெய் ரூ.115லிருந்து ரூ.120க்கும், தும்பை நல்லெண்ணெய்
ரூ.126லிருந்து ரூ.131க்கும் விற்கப்பட்டது, என்றார்.


