/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கரிவலம்வந்தநல்லூரியில் விவசாயி மர்மச்சாவுகரிவலம்வந்தநல்லூரியில் விவசாயி மர்மச்சாவு
கரிவலம்வந்தநல்லூரியில் விவசாயி மர்மச்சாவு
கரிவலம்வந்தநல்லூரியில் விவசாயி மர்மச்சாவு
கரிவலம்வந்தநல்லூரியில் விவசாயி மர்மச்சாவு
ADDED : ஆக 03, 2011 12:30 AM
திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் அருகே விவசாயி மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரிவலம்வந்தநல்லூர் அருகே ராஜபாளையம் மெயின்ரோட்டில் தனியார் காட்டன் மில் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் சிவந்திப்பட்டி மேலத்தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் புதியவன்(40) என்றும், இவர் தனது நிலத்தில் விளைந்த பருத்தியை சங்கரன்கோவில் மார்க்கெட்டிற்கு அனுப்பி வைத்ததற்கு பணம் வாங்குவதற்காக சங்கரன்கோவில் வந்தவர் மீண்டும் ஊருக்கு திரும்பவில்லை என்றும் தெரிய வந்தது.
இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் அருகே கிடந்த ஆண் உடல் புதியவன்தான் என அடையாளம் தெரிந்ததோடு இவர் எப்படி இங்கு வந்து இறந்தார். என்ன காரணம் என்பதையும் போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.