/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கருங்குளத்தில் போலீசார் கலவர தடுப்பு ஒத்திகைகருங்குளத்தில் போலீசார் கலவர தடுப்பு ஒத்திகை
கருங்குளத்தில் போலீசார் கலவர தடுப்பு ஒத்திகை
கருங்குளத்தில் போலீசார் கலவர தடுப்பு ஒத்திகை
கருங்குளத்தில் போலீசார் கலவர தடுப்பு ஒத்திகை
ADDED : அக் 11, 2011 02:18 AM
செய்துங்கநல்லூர் : கருங்குளத்தில் போலீசார் கலவர தடுப்பு ஒத்திகை
நடத்தினர்.
திடீரென ஏற்படும் கலவரத்தினை ஆயுதமின்றி தடுப்பது எப்படி என்ற
பயிற்சி போலீசாருக்கு கொடுக்கப்பட்டது. கருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள
தனியார் கல்யாண மண்டபத்தில் இந்த ஒத்திகை நடந்தது. ஸ்ரீவைகுண்டம்
டி.எஸ்.பி., மணி தலைமையில் நடந்த இந்த பயிற்சியினை ஆயுதப்படை
தனிப்பிரிவினர் நடத்தினர். காலை 6 மணி முதல் இந்த ஒத்திகை நடந்தது. இதனை
தொடர்ந்து கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து ஆஸ்பத்திரிக்கு
எடுத்து செல்வது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வெங்கடாசல பாபு,
கிப்சன் ஆகியோர் சிறப்பு பயிற்சி கொடுத்தனர். பின்னர் கலவர சமயங்களிலும்,
மற்ற நேரங்களிலும் போலீசார் கடைபிடிக்க வேண்டிய சட்ட திட்டங்கள், வழக்கு
பதிவுகள் குறித்து அரசு வக்கீல் சார்லஸ் பயிற்சி கொடுத்தார். மாலையில்
உள்ளாட்சி தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்த டி.எஸ்.பி.,மணி தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
இதில் இன்ஸ்பெக்டர்கள் செய்துங்கநல்லூர் ராஜ் தலைமையிலும், ஏரல் ராமராஜ்
தலைமையிலும், ஆழ்வார்திருநகரி பட்டாணி தலைமையிலும், குரும்பூர் மாரிமுத்து
தலைமையிலும், ஸ்ரீவைகுண்டம் அருண் முருகன் தலைமையிலும், சாயர்புரம்
சப்-இன்ஸ்பெக்டர் ஐசக் தலைமையிலும், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ்
ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் ரவிமதி, காந்திமதி ஆகியோர் தலைமையிலும் போலீசார்
அணிவகுத்து சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த
ஊர்வலம் கால்வாய் கிராமம் முழுவதும் சென்று அங்கிருந்து கெட்டியம்மாள்புரம்
கிராமம் சென்று பின்னர் வெள்ளூர் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்கள்
வழியாக ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தது. பின்னர் ஸ்ரீவைகுண்டம் ஆற்று
பாலத்திலிருந்து துவங்கி பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து சகட்டுகார தெரு
வழியாக பெருமாள் கோயில் சன்னதியை அடைந்தது. அங்கிருந்து மேடைப்பிள்ளையார்
தெரு வழியாக வந்து ரதவீதி சென்று டி.எஸ்.பி.,கேம் அலுவலகத்தை அடைந்தது.
சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த ஊர்வலத்தில் ஏராளமான போலீசார், பெண்
போலீசார், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் டி.எஸ்.பி.,மணி
நிருபர்களிடம் கூறியதாவது, இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவதன் நோக்கம்
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் துணை நிற்போம் என்ற
விழிப்புணர்வை ஏற்படுத்தத் தான். யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம்
அவர்களை எவரும் தடுக்க கூடாது. அதே போல் யார் யாருக்காகவும் ஓட்டு
கேட்கலாம். ஆனால் கூட்டம் போட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும்
இடையூறு செய்ய கூடாது. வாக்கு சாவடிகள் அனைத்திற்கும் தகுந்த பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. முறைகேடாக வாக்காளர்கள் நடந்து கொண்டாலோ, கள்ள ஓட்டு போட
முயன்றாலோ தக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வரும் உள்ளாட்சித்
தேர்தலில் பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க தகுந்த பாதுகாப்பு
கொடுக்கப்படும். பொதுமக்கள் எந்த வதந்திகளையும் நம்பக் கூடாது இவ்வாறு
கூறினார்.


