ADDED : ஜூலை 13, 2011 03:37 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிப்பட்டி ரெங்கேஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நாளை (ஜூலை 14) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.விழாவுக்கு, திருச்சி சிவானி கல்விக்குழும பெருந்தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார்.
கல்விக்குழும தலைவர் ரங்கசாமி முன்னிலை வகிக்கிறார். மாஜி எஸ்.பி., கலியமூர்த்தி வகுப்புகளை துவக்கி வைத்து பேசுகிறார்.நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ராஜசேகரன், இணைச்செயலாளர் சசிக்குமார், செயலாளர் பிரபாகரன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.


