/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சித்தப்பாவை கடித்துக் குதறிய வாலிபர் அதிரடி கைதுசித்தப்பாவை கடித்துக் குதறிய வாலிபர் அதிரடி கைது
சித்தப்பாவை கடித்துக் குதறிய வாலிபர் அதிரடி கைது
சித்தப்பாவை கடித்துக் குதறிய வாலிபர் அதிரடி கைது
சித்தப்பாவை கடித்துக் குதறிய வாலிபர் அதிரடி கைது
ADDED : ஆக 07, 2011 01:41 AM
மத்தூர்: போச்சம்பள்ளி அருகே குடிபோதையில் சித்தப்பாவின் மர்ம உறுப்பை கடித்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளியை அடுத்த குள்ளனூரை சேர்ந்தவர் மாது (35). இவரது அண்ணன் மகன் பழனி (25). நேற்று குள்ளனூரில் உறவினர் வீட்டு சாவில் கலந்து கொண்ட இவர்கள் இருவரும் மது குடிக்க போச்சம்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் மது குடித்துவிட்டு போதை தலைகேறியதும் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் இருந்த பழனி தனது சித்தபாவின் மர்ம உறுப்பை கடித்துள்ளார். மேலும், விரல் மற்றும் கால் பகுதியில் கண்ட இடங்களில் கடித்து காயப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் இருவரையும் விலக்கி மாதுவை சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவியாக மாதுவுக்கு மர்ம உறுப்பில் 16 தையல்கள் போட்டுள்ளனர். மேலும் மேல் சிகிச்சைக்காக மாது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் காசிநாதன் விசாரித்து, பழனியை கைது செய்தார். இந்த சம்பவம் போச்சம்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


