/உள்ளூர் செய்திகள்/தேனி/குரல்வளம் உள்ளவர்களை தேடும் அரசியல் கட்சியினர்குரல்வளம் உள்ளவர்களை தேடும் அரசியல் கட்சியினர்
குரல்வளம் உள்ளவர்களை தேடும் அரசியல் கட்சியினர்
குரல்வளம் உள்ளவர்களை தேடும் அரசியல் கட்சியினர்
குரல்வளம் உள்ளவர்களை தேடும் அரசியல் கட்சியினர்
ADDED : செப் 27, 2011 09:35 PM
பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் பிரசாரம் செய்வதற்கு, நல்லகுரல் வளம் உள்ளவர்களை அரசியல் கட்சியினர் தேடி வருகின்றனர்.
இங்குள்ள அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்., கட்சியினர் தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு நல்ல குரல்வளம் உள்ளவர்களை தேடி வருகின்றனர். கட்சிகளின் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கட்சியினரும் மூன்று நபர்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆட்டோவில் மைக்பிரச்சாரத்திற்கு தினமும் 500 ரூபாயும், காலை, மதியம், இரவு உணவு வழங்கப்படுகிறது. இவர்களை கண்காணிப்பதற்கு உடன் ஒருவர் செல்கிறார். அ.தி.மு.க., வினர் நலத்திட்ட உதவிகளை கூறி ஓட்டு கேட்க உள்ளனர். தி.மு.க., வினர் முந்தைய ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை விளக்கி ஓட்டு கேட்க திட்டமிட்டுள்ளனர்.


