/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மலைப்பகுதிகளில் கால்நடை சிறப்பு முகாம் நடத்த எதிர்பார்ப்புமலைப்பகுதிகளில் கால்நடை சிறப்பு முகாம் நடத்த எதிர்பார்ப்பு
மலைப்பகுதிகளில் கால்நடை சிறப்பு முகாம் நடத்த எதிர்பார்ப்பு
மலைப்பகுதிகளில் கால்நடை சிறப்பு முகாம் நடத்த எதிர்பார்ப்பு
மலைப்பகுதிகளில் கால்நடை சிறப்பு முகாம் நடத்த எதிர்பார்ப்பு
ADDED : ஆக 14, 2011 10:21 PM
கொடைக்கானல் : கொடைக்கானலில் மாறிவரும் சீதோஷ்ண நிலையால், கால்நடைகள் நோய்தாக்குதலுக்கு ஆளாகுவதை தடுக்க, துறை அதிகாரிகள் சிறப்பு முகாம்நடத்தவேண்டுமென விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. சீதோஷ்ணநிலை மாற்றத்தால் கால்நடைகள் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகி இறப்பது அடிக்கடி நடக்கும் ஒன்றாக மலைப்பகுதிகளில் உள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்தாக்குதல், சிகிச்சை முறைகள் குறித்து மக்களிடம் போதியவிழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும். தற்போது வெயில், மழை, குளிர், பனிமூட்டம் என மாறி, மாறி பருவநிலை உள்ளதால் கடந்த சில மாதங்களாகவே ஏராளமான கால்நடைகள் இறந்து வருகின்றன. இதுகுறித்து துறை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கை எடுக்காததால், இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மலைகிராமங்களில் உள்ள கிளை கால்நடை மருந்தங்களிலும், கிளைநிலையங்களிலும் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பது இல்லை. காரணம் கேட்டால் காலி பணியிடத்தை காரணம் கூறுவது தொடர்கதையாக உள்ளது. கொடைக்கானல், தாண்டிக்குடி மற்றும் இதனை சுற்றியுள்ள மலைகிராமங்களில் கால்நடைகளை காக்க மாவட்ட கால்நடைத்துறை சிறப்பு முகாம்கள் நடத்தவேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் உடனடியாக சிறப்பு முகாம்கள் நடத்தினால் தான் கால்நடைகள் தொடர் இறப்பு தடுக்கப்படும். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும்.