துரோகம் செய்து விட்டது அரசு:ஹசாரே குழுவினர் புலம்பல்
துரோகம் செய்து விட்டது அரசு:ஹசாரே குழுவினர் புலம்பல்
துரோகம் செய்து விட்டது அரசு:ஹசாரே குழுவினர் புலம்பல்
UPDATED : ஆக 28, 2011 05:09 AM
ADDED : ஆக 27, 2011 11:39 PM
புதுடில்லி:'லோக்பால் விவகாரத்தில், அரசு எங்களுக்கு துரோகம் செய்து விட்டது.
பார்லிமென்டில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்பது தான், எங்கள் கோரிக்கை. அதை, அரசு புறக்கணித்து விட்டது' என, ஹசாரே குழுவினர் தெரிவித்தனர்.அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:லோக்பால் விவகாரம் குறித்து, பார்லிமென்டில் விவாதம் நடத்திய பின், ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், அல்லது தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான், எங்களின் பிரதான கோரிக்கை. இதைத் தான், அன்னா ஹசாரே, பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் வலியுறுத்தினார்.
இதை ஏற்பதாக, நேற்று (நேற்று முன்தினம்) எங்களுக்கு அரசு தரப்பில், உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில் அரசு தரப்பு, ஏமாற்றி விட்டது. எங்களுக்கு, துரோகம் செய்து விட்டது. லோக்பால் விவகாரத்தில், கடந்த நான்கு நாட்களில், தனது கொள்கைகளை, அரசு தரப்பு மூன்று முறை மாற்றிக் கொண்டு விட்டது.இவ்வாறு, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஹசாரே குழுவைச் சேர்ந்த, பிரசாந்த் பூஷன் கூறியதாவது:பார்லிமென்டில் லோக்பால் விவகாரம் குறித்து, ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று தான், அன்னா ஹசாரே கூறினார். ஆனால், ஹசாரேயின் கோரிக்கைக்கு, அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை.இவ்வாறு, பிரசாந்த் பூஷன் கூறினார்.


