ADDED : ஆக 28, 2011 09:39 AM
வாஷிங்டன் : அல் குவைதா பயங்கரவாத அமைப்பின் 2வது முக்கிய தலைவரான அத்யாஹ் அப்த் அல் ரஹ்மான் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானின் வஜிர்ஸ்தான் பகுதியில் அமெரிக்க படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் அவன் கொல்லப்பட்டுள்ளாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. லிபியாவை சேர்ந்த இவன் கடந்த ஆண்டு அல் குவைதா அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனின் திட்டங்களுக்கு முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டவன் ரஹ்மான் என்பதும் கண்டுபடிக்கப்பட்டுள்ளது.


