ADDED : அக் 07, 2011 12:57 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வாழை, மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தீவிரமாக நடந்து
வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் கதளி, செவ்வாளை, பூவன், 'ஜீ8' போன்ற ரக
வாழைக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. சென்றாண்டு 5,672 ஹெக்டேர் பரப்பில்
வாழை சாகுபடி செய்யப்பட்டது. ஏப்ரல் முதல் மறு ஏப்ரல் மாதம் வரை சாகுபடி
செய்யப்படும். இந்தாண்டு இதுவரை 2,468 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வட்டார வாரியாக ஈரோட்டில் 464 ஹெக்டேர், பெருந்துறை 167, பவானி 1,117,
கோபி 399, சத்தி 321 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து
சாகுபடி அதிகரிக்கும்.கன்று நடவு, திசு வாழை என இரண்டு வடிவில் சாகுபடி
செய்யபப்படுகிறது. ஹெக்டேருக்கு 70 ஆயிரம் ரூபாய் செலவாகும்; வருவாய் 1.80
லட்சம் ரூபாய் ஈட்டலாம். கன்று நடவுக்கு ஹெக்டேருக்கு 16,887 ரூபாய் அரசு
மானியம் வழங்குகிறது. திசு வாழைக்கு ஹெக்டேருக்கு சாகுபடிச் செலவு 82
ஆயிரம் ரூபாய்; வருவாய் 2.5 லட்சம் ரூபாய் ஈட்டலாம்.மரவள்ளி: மாவட்டத்தில்
மரவள்ளிக் கிழக்கு வட்டார வாரியாக ஈரோட்டில் 478 ஹெக்டேர், பெருந்துறை 158,
பவானி 1,194, கோபி 285, சத்தி 3,125 ஹெக்டேர் என 5,240 ஹெக்டேர் நடவு
செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 6,515 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டது.
ஹெக்டேருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். 90 ஆயிரம் ரூபாய் வரை வருவாய்
கிடைக்கும். இதற்கு அரசு மானியம் ஏதுமில்லை.பப்பாளி: பப்பாளி பயிர் வட்டார
வாரியாக ஈரோட்டில் ஒரு ஹெக்டேர், பெருந்துறை எட்டு, பவானி 124, கோபி 37,
சத்தி 39 ஹெக்டேர் என 209 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 51 ஹெக்டேரில் மட்டும் நடவு செய்யப்பட்டது. சாகுபடிக்கு 17
ஆயிரம் ரூபாய் செலவாகும்; வருவாய் 95 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு செடி
15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 2,552 ரூபாய் மானியம்
வழங்கப்படுகிறது.காற்று மற்றும் மழை அதிகமாக தாக்காவிட்டால் இரண்டு
ஆண்டுகள் வரைகூட பப்பாளி பலன் தரும். நடப்பாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில்
கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சி அடைந்து ஒரு பழம்
ஐந்து முதல் 10 ரூபாய்க்குள் விற்கப்படுகிறது.


