ADDED : ஜூலை 14, 2011 09:49 PM
உடுமலை : உடுமலை சப்-கோர்ட் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு
அரசு வக்கீலாக ராமகிருஷ்ணனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர் உடுமலை
வக்கீல் சங்க தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அ.தி.மு.க.,
வில் உடுமலை நகர இளைஞரணி செயலாளர், கோவை மாவட்ட வக்கீல் பிரிவு மாவட்ட இணை
மற்றும் துணை தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். தற்போது,
மடத்துக்குளம் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பதவியில் உள்ளார்.
சட்டப்படிப்பு மற்றும் முதுநிலைபடிப்பு படித்துள்ளார். வக்கீல்கள் மற்றும்
கட்சியினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


