/உள்ளூர் செய்திகள்/கரூர்/அ.தி.மு.க.,வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றிஅ.தி.மு.க.,வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி
அ.தி.மு.க.,வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி
அ.தி.மு.க.,வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி
அ.தி.மு.க.,வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி
ADDED : ஜூலை 19, 2011 12:35 AM
க.பரமத்தி: அரவக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன் க.பரமத்தி யூனியன் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதிக்கு அ.தி.மு.க., சார்பில் செந்தில்நாதன், தி.மு.க., வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர் அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் நன்றி தெரிவித்து வருகிறார். கடந்த 10ம் தேதி தென்னிலை, கோடந்தூர், திருமங்கலம், சின்னதாராபுரம், தொக்குப்பட்டி, சூடாமணி, ராஜபுரம் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட பகுதிகளில் செந்தில்நாதன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். செந்தில்நாதனுடன் அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் லோகநாதன், ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட தலைவர் செந்தில், ஒன்றிய அவைத்தலைவர் வீராசாமி, பொருளாளர் சரவணன், சின்னதாராபுரம் பஞ்சாயத்து தலைவர் ராசாத்தி, சூடாமணி பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.