/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இணையதளம் மூலம் வணிக வரி வியாபாரிகளுக்கு விளக்கம்இணையதளம் மூலம் வணிக வரி வியாபாரிகளுக்கு விளக்கம்
இணையதளம் மூலம் வணிக வரி வியாபாரிகளுக்கு விளக்கம்
இணையதளம் மூலம் வணிக வரி வியாபாரிகளுக்கு விளக்கம்
இணையதளம் மூலம் வணிக வரி வியாபாரிகளுக்கு விளக்கம்
ADDED : ஜூலை 25, 2011 12:12 AM
புதுச்சேரி : இணைய தளம் மூலம் வணிக வரி கட்டும் முறை குறித்து வியாபாரிகளுக்கான கூட்டம் ஓட்டல் ராம் இன்டர்நேஷனலில் நடந்தது.
இணைய தளம் மூலம் வணிக வரி செலுத்தும் வசதியை கடந்த 1ம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதுச்சேரி மண்டல அலுவலகமும், வர்த்தக சபையும் இணைந்து வணிகர்களுக்கான கூட்டத்தை ராம் இன்டர்நேஷனல் ஓட்டலில் நேற்று முன்தினம் மாலை நடத்தின. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, புதுச்சேரி மண்டல முதன்மை மேலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். வர்த்தக சபைத் தலைவர் செண்பகராஜன் தலைமை தாங்கினார். வணிக வரித்துறை ஆணையர் ராஜசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வங்கியின் சென்னை தலைமையக பொது மேலாளர் பார்தி சிறப்புரையாற்றினார். புதுச்சேரி கிளையின் தேசிய தகவல் மைய நிர்வாகிகள் கணினி உதவியுடன், இணையதளம் மூலம் வணிக வரி செலுத்தும் முறை குறித்து விளக்கினார். இதனால் வணிகர்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும் கூறினார். வர்த்தக சபை பொது அதிகாரி குணசேகரன் நன்றி கூறினார்.