/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அவிநாசி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் : வீடியோ கான்பரன்ஸில் முதல்வர் ஜெ., திறப்புஅவிநாசி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் : வீடியோ கான்பரன்ஸில் முதல்வர் ஜெ., திறப்பு
அவிநாசி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் : வீடியோ கான்பரன்ஸில் முதல்வர் ஜெ., திறப்பு
அவிநாசி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் : வீடியோ கான்பரன்ஸில் முதல்வர் ஜெ., திறப்பு
அவிநாசி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் : வீடியோ கான்பரன்ஸில் முதல்வர் ஜெ., திறப்பு
திருப்பூர் : அவிநாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவை, முதல்வர் ஜெயலலிதா நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் திறந்து வைத்தார்.
கலெக்டர் மதிவாணன், எம்.எல்.ஏ.,கருப்புசாமி ஆகியோர் முன்னிலையில் அவிநாசியில் வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் திருமலைசாமி, அவிநாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தாழிட்ட கட்டடத்துக்குள் திறப்பு விழா'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதல்வர் ஜெ., திறப்பு விழா நடத்தியதால், முன்னெச்சரிக்கை எனக்கூறி, காலை 9.00 மணி முதல் புறநோயாளிகள் பிரிவு கட்டடம் உட்புறம் தாழிடப்பட்டது. கலெக்டர், எம்.எல்.ஏ., உட்பட டாக்டர்கள், நிருபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ., பிரேமா உட்பட பொதுமக்கள் அனைவரும் வெளியே இருந்த பந்தலில் காத்திருந்தனர்.