/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வழித்தடத்தை அடைத்ததால் மக்கள் திரண்டனர் ஆர்.டி.ஓ., பேச்சு நடத்தியதால் கிடைத்தது தீர்வுவழித்தடத்தை அடைத்ததால் மக்கள் திரண்டனர் ஆர்.டி.ஓ., பேச்சு நடத்தியதால் கிடைத்தது தீர்வு
வழித்தடத்தை அடைத்ததால் மக்கள் திரண்டனர் ஆர்.டி.ஓ., பேச்சு நடத்தியதால் கிடைத்தது தீர்வு
வழித்தடத்தை அடைத்ததால் மக்கள் திரண்டனர் ஆர்.டி.ஓ., பேச்சு நடத்தியதால் கிடைத்தது தீர்வு
வழித்தடத்தை அடைத்ததால் மக்கள் திரண்டனர் ஆர்.டி.ஓ., பேச்சு நடத்தியதால் கிடைத்தது தீர்வு
ADDED : ஆக 28, 2011 12:51 AM
அவிநாசி : அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் போக்குவரத்துக்கு தடை விதித்து, இரும்பு கம்பி நடப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.புதுப்பாளையம் ஊராட்சி, வஞ்சிபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதையடுத்து மேற்கு வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி வழியாக மாற்றுப்பாதை அமைக்கும் பணியும் துவங்கியுள்ளது. இந்நிலையில், மேற்கு வஞ்சிபாளையம் வழியாக செல்லும் பாதையை ரயில்வே நிர்வாகத்தினர், இரும்பு கம்பிகளை வைத்து நேற்று அடைத்தனர்.இதையறிந்த பொதுமக்கள் நேற்று பகல் 12.00 மணிக்கு அப்பகுதியில் திரண்டு, ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பூர் ஆர்.டி.ஓ., செங்கோட்டையன், அவிநாசி தாசில்தார் நாகப்பன், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் அங்குவந்து, பொதுமக்களை சமாதானம் செய்தனர். ''மக்கள் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து, பாதை விட வேண்டும்,'' என்று ஆர்.டி.ஓ., தெரிவித்தார்.பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், 'ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், மேற்கு வஞ்சிபாளையம் வழியாக டவுன் பஸ், மினி பஸ் போக்குவரத்து இருந்தது; இப்போது மாற்றுப்பாதை அமைக்கும் நிலையில், அதையும் ரயில்வே நிர்வாகத்தினர் தண்டவாளத்தை வைத்து அடைத்துள்ளனர். இதனால், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது.மக்களுக்கு சிரமம் ஏற்படும்; பொதுமக்களின் நிலையை உணர்ந்து, டூவீலர், கார், பஸ் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்; அதே போல் கணியாம்பூண்டி மற்றும் மேற்கு வஞ்சிபாளையம் வழியாக கனரக வாகனங்களை அனுமதிக்கக்கூடாது, என்று கோரிக்கை வைத்தனர். அதிகாரிகளின் கலந்தாய்வுக்கு பின், மாற்று பாதைக்கு தடை வைக்கப்பட்ட இடத்தில், 11க்கு 11 அடி என்ற அளவில் மட்டும் இடம் விடுவதாக, ரயில்வே அதிகாரிகள் ஒத்துக்கொண்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


