ADDED : ஆக 12, 2011 01:25 AM
திருவாரூர்: திருவாரூர் அருகே கெராடாச்சேரி பஸ் விபத்தில் காயம் அடைந்த பள்ளி மாணவி வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொரடாச்சேரி அருகே உள்ள கிளேரியம் நடுத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகள் வினிதா (17). கொரடாசேரியில் உள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். வினிதாவுக்கு தீராத வயிற்று வலி காரணமாக பூச்சி மருந்து அருந்தினார். உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி வினாதா நேற்று முன்தினம் இறந்தார். கொரடாச்சேரி போலீஸார் விசாரிக்கின்றார். இறந்து போன மாணவி வினிதா கடந்த மாதம் 29ம் தேதி சமச்சீர் கல்விக்காக தி.மு.க., நடத்திய வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தின் போது கொரடாச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்டு மீண்டும் வீட்டுக்கு அரசு பஸ்ஸில் சென்ற போது, பஸ் விபத்துக்குள்ளாகி காயமடைந்த 16 பள்ளி மாணவ, மாணவியரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


