ஸ்ட்ராஸ்கான் மீதான விசாரணை தள்ளி வைப்பு
ஸ்ட்ராஸ்கான் மீதான விசாரணை தள்ளி வைப்பு
ஸ்ட்ராஸ்கான் மீதான விசாரணை தள்ளி வைப்பு
ADDED : ஜூலை 13, 2011 06:08 AM
நியூயார்க்: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு விடுதலையான முன்னாள் ஐ.எம்.எப்.
தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கானின் மீதான மறுவிசாரணையை நடந்த சிறிது அவகாசம் தேவைப்படுவதால் விசாரணையை ஆகஸ்ட் -1-ம் தேதி்க்கு நியூயார்க் கோர்ட் தள்ளி வைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்ட்ராஸ்கான் (68), முன்னாள் ஐ.எம்.எப்.தலைவராக இருந்தார். அப்போது நியூயார்க் வந்திருந்தார். கடந்த மே மாதம் அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த போது 32 வயது பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் கூறப்பட்டு வழக்குப்பதிவுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்குப்பின் வீட்டுக்காவலிலிருந்து விடுதலையானார். எனினும் இவர் மீதான வழக்கு நியூயார்க் கோர்டில் நடந்து வருகிறது. பாலியல் புகார் தொடர்பான வழக்கில் மீண்டும் ஜூலை 18-ம் தேதி ஆஜராகுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கினை தள்ளுபடி செய்யுமாறு ஸ்ட்ராஸ்கானின் வக்கீல் வில்லியம் டெய்லர் மனு செய்தார். மறுவிசாரணை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு நியூயார்க் கோர்ட் தள்ளி வைத்தது.


