/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/உள்ளாட்சி தேர்தலுக்காக வளர்ச்சி பணிகள் கணக்கெடுப்புஉள்ளாட்சி தேர்தலுக்காக வளர்ச்சி பணிகள் கணக்கெடுப்பு
உள்ளாட்சி தேர்தலுக்காக வளர்ச்சி பணிகள் கணக்கெடுப்பு
உள்ளாட்சி தேர்தலுக்காக வளர்ச்சி பணிகள் கணக்கெடுப்பு
உள்ளாட்சி தேர்தலுக்காக வளர்ச்சி பணிகள் கணக்கெடுப்பு
ADDED : ஜூலை 13, 2011 10:10 PM
சிவகங்கை : உள்ளாட்சி தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கிடப்பில் உள்ள வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தேர்தலில், அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெரும் நோக்கில், ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதற்கட்டமாக, கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில், கிடப்பில் உள்ள வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிடப்பில் உள்ள வளர்ச்சி பணிகள், அத்திட்டம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்குமா, இதற்கான செலவு, காலம் போன்ற விபரங்களை அனைத்து துறைகளில் இருந்தும் சேகரித்து வருகின்றனர், திட்டம் நிறைவேற்றுவதால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் உள்ளிட்டவைகளை திட்ட வாரியாக அனைத்து துறை அதிகாரிகளிடம் பெற்று அதன் விபரத்தை சென்னைக்கு அனுப்ப மாவட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ''விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் நிலுவையில் உள்ள முக்கிய திட்டங்களை விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் நேரடியாக பயன்பெறும் திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதியை பட்ஜெட்டில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.


