/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாநகராட்சியில் 1,425 மின் விளக்கு அமைக்க ரூ.95.47 லட்சம் ஒதுக்கீடுமாநகராட்சியில் 1,425 மின் விளக்கு அமைக்க ரூ.95.47 லட்சம் ஒதுக்கீடு
மாநகராட்சியில் 1,425 மின் விளக்கு அமைக்க ரூ.95.47 லட்சம் ஒதுக்கீடு
மாநகராட்சியில் 1,425 மின் விளக்கு அமைக்க ரூ.95.47 லட்சம் ஒதுக்கீடு
மாநகராட்சியில் 1,425 மின் விளக்கு அமைக்க ரூ.95.47 லட்சம் ஒதுக்கீடு
ADDED : செப் 18, 2011 09:35 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 1,425 மின் விளக்குகள்
புதிதாக அமைக்கப்படுகின்றன.
இதற்காக, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில்
இருந்து 95.47 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி
ஒவ்வொரு வார்டுகளிலும் 20 முதல் 100 மின் விளக்குகள் வரை அமைக்கப்பட உள்ளன.
வார்டு 2 முதல் 7 வரை; 10, 11, 13, 16, 18 முதல் 26 வார்டு வரை; 28 முதல்
31 வார்டு வரை; 33, 34, 39, 42, 43, 44, 47, 50, 51, 52 வார்டுகள் என 33
வார்டுகளில், தலா 20 வீதம் 660 மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. 14, 27,
48 ஆகிய வார்டுகளில் 25 வீதம் 75 மின் விளக்கு; 1, 32, 37, 38, 45, 49
ஆகிய வார்டுகளில் 30 வீதம் 180 மின்விளக்கு; 8, 17, 35, 36, 40 ஆகிய
வார்டுகளில் 40 வீதம் 200 மின் விளக்கு; 9, 15, 46 ஆகிய வார்டுகளில், 50
வீதம் 150 மின் விளக்கு; 41வது வார்டில் 60 விளக்கு; 12வது வார்டில் 100
விளக்கு என 1,425 மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன.


