/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஒரு வாக்காளருக்கு தலா 5 இட்லி 100 இட்லி பார்சல்கள் பறிமுதல் : கோவில்பட்டியில் அதிரடிஒரு வாக்காளருக்கு தலா 5 இட்லி 100 இட்லி பார்சல்கள் பறிமுதல் : கோவில்பட்டியில் அதிரடி
ஒரு வாக்காளருக்கு தலா 5 இட்லி 100 இட்லி பார்சல்கள் பறிமுதல் : கோவில்பட்டியில் அதிரடி
ஒரு வாக்காளருக்கு தலா 5 இட்லி 100 இட்லி பார்சல்கள் பறிமுதல் : கோவில்பட்டியில் அதிரடி
ஒரு வாக்காளருக்கு தலா 5 இட்லி 100 இட்லி பார்சல்கள் பறிமுதல் : கோவில்பட்டியில் அதிரடி
ADDED : அக் 11, 2011 02:18 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு கொடுக்க தயார் செய்த
இட்லி பார்சலை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில்
கண்டுபிடித்தனர்.
கோவில்பட்டி நகராட்சி 24வது வார்டில் அதிமுகவை சேர்ந்த
முருகன் என்பவர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர்
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக குறிப்பிட்ட கடையில் தலா 5 இட்லிகள் கொண்ட
பார்சல்களுக்கு ஆர்டர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி
தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி
தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் குருநாதன் தலைமையில், ஆர்ஐ
ராஜ்குமார், விஏஓ ராஜசேகரன், கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதாமணி,
போலீசார் கண்ணன், மோகன் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் கோவில்பட்டி
தெட்சினாமூர்த்தி கோயில் தெருவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில்
சுமார் 100 இட்லி பார்சல்கள் தயாராவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து
பறக்கும்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் கேட்டபோது, வேட்பாளர்
முருகன் ஆர்டரின் பேரில் இட்லி பார்சல்கள் தயாராவதாக தெரிவித்தார்.
இதையடுத்து வேட்பாளர் முருகன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக
கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தனர். தொடர்ந்து போலீசார்
வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


