/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/என்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவாக இந்திய கம்யூ., ஓட்டு சேகரிப்புஎன்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவாக இந்திய கம்யூ., ஓட்டு சேகரிப்பு
என்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவாக இந்திய கம்யூ., ஓட்டு சேகரிப்பு
என்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவாக இந்திய கம்யூ., ஓட்டு சேகரிப்பு
என்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவாக இந்திய கம்யூ., ஓட்டு சேகரிப்பு
ADDED : அக் 04, 2011 01:55 AM
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்.,
வேட்பாளருக்கு ஆதரவாக, இந்திய கம்யூ., கட்சியினர் ஓட்டு சேகரிப்பில்
ஈடுபட்டனர்.இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.
ஆர்.காங்.,
கட்சிக்கு, இந்திய கம்யூ., ஆதரவு தெரிவித்துள்ளது. என்.ஆர். காங்.,
வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து, இந்திய கம்யூ., நேற்று பிரசாரத்தைத்
துவக்கியது. வீமக்கவுண்டன்பாளையம் வார்டுக்குட்பட்ட பகுதிகளில், முன்னாள்
அமைச்சர் விசுவநாதன் தலைமையில் வீடு வீடாகச் சென்று, தீவிர ஓட்டு
சேகரிப்பில் ஈடுபட்டனர்.மாநில செயற்குழு உறுப்பினர் சேது செல்வம், மாநிலக்
குழு உறுப்பினர்கள் பலராமன், ஜெயபாலன், இந்திரா நகர் தொகுதி செயலாளர்
கண்ணன், தொகுதிக் குழு உறுப் பினர்கள் ஜீவா, கருணாகரன், மாதர் சங்கத் தலைவி
கல்யானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


