திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தப்பின
திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தப்பின
திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தப்பின
ADDED : ஆக 12, 2011 02:16 AM
திருமங்கலம்:திருமங்கலம் அருகே இரவு நேரத்தில் தண்டவாளத்தில் விரிசல்
ஏற்பட்டது, உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால், ரயில்கள் தப்பின.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பயணிகள் ரயில் நேற்று இரவு 2.45
மணிக்கு திருமங்கலம் அருகே எஸ்.பி., நத்தம் ரயில்வே கேட்டை கடந்து
சென்றபோது 100 மீட்டர் தூரத்தில் வித்தியாசமாக சத்தம் கேட்டு உள்ளது. இது
குறித்து ரயிலின் டிரைவர் கள்ளிக்குடி ரயில்வே நிலையத்தில் புகார்
செய்தார். அவர்கள் சிவரக்கோட்டை ரயில்வே கேட் கீப்பர் முத்துவேலுக்கு தகவல்
தெரிவித்தனர். அவர், அங்கு சென்று பார்த்த போது, தண்டவாளத்தில் பெரிய
அளவில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக சிறு கட்டைகளை
வைத்து கிளாம்புகள் மூலம் அந்த பகுதியை தற்காலிகமாக சரி செய்தார். நேற்று
காலை விருதுநகர் ரயில்வே இன்ஜினியரிங் பிரிவு அதிகாரிகள் அந்த இடத்தை
வெல்டிங் வைத்து சரி செய்தனர்.


