/உள்ளூர் செய்திகள்/மதுரை/வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரன் உறுதிவீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரன் உறுதி
வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரன் உறுதி
வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரன் உறுதி
வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரன் உறுதி
ADDED : அக் 05, 2011 12:50 AM
மதுரை : ''மதுரை மாநகராட்சி 5வது வார்டில் இலவச வீட்டுமனை பட்டா, மேல்நிலை தொட்டி அமைத்து சுகாதாரமான குடிநீர் தங்கு தடையின்றி வழங்கப்படும்.
ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி பள்ளிகள் அமைக்கப்படும். குறைதீர் முகாம் நடத்தி மக்களுக்கு சேவை செய்வேன்,'' என, தி.மு.க., வேட்பாளர் ரா.ரவீந்திரன் உறுதி கூறினார்.
தி.மு.க., முதல் பகுதி செயலாளரான இவர் கூறியதாவது: 5வது வார்டில் தார்சாலை, குடிநீர், மின் விளக்கு, பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் அவைகளை நிறைவேற்றுவேன். தெருவிளக்குகள் நன்கு பராமரிக்கப்படும்.
கொசு மருந்து அடித்தும், கொசு உற்பத்தியை தடுக்க வழிவகை செய்யப்படும். குப்பைகள் தினமும் அகற்றப்படும். ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி பள்ளிகள் அமைக்கப்படும். தேவையான இடங்களில் மேல்நிலை தொட்டிகள் அமைத்து சுகாதாரமான குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பி.பி.குளம் கண்மாயை சுத்தம் செய்து நிலத்தடிநீர் ஆதாரம் காக்கப்படும். இலவச வீட்டுமனை பட்டா பெற்று கொடுப்பேன். பழுதான சாலைகள் புதுப்பிக்கப்படும். ஐந்து முனை ரோடு சந்திப்பு நெரிசல் இல்லாததாக மாற்றப்படும். குறைதீர் முகாம் நடத்தி மக்கள் குறைகள் தீர்க்கப்படும். பி.பி.குளம் நேதாஜி மெயின் ரோட்டில் மன்ற அலுவலகத்தில் குறைகளை எழுதி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தபால்தந்திநகரில் இருந்து பி.பி.குளம் வழியாக மாட்டுத்தாவணி, அனுப்பானடிக்கு பஸ்கள் இயக்கப்படும், என்றார்.


