/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சங்க பேரவை கூட்டம்ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சங்க பேரவை கூட்டம்
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சங்க பேரவை கூட்டம்
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சங்க பேரவை கூட்டம்
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சங்க பேரவை கூட்டம்
ADDED : அக் 04, 2011 01:54 AM
காரைக்கால் : காரைக்கால் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சங்கம் சார்பில்
பேரவைக் கூட்டம் நடந்தது.காரைக்கால் வலத்தெரு கண்ணையாபிள்ளை நினைவு பள்ளி
வளாகத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சங்க பேரவைக் கூட்டம்
நடந்தது.தலைவர் மகாதேவன் தலைமை தங்கினார். கூட்டத்தில் புதுச்சேரி மற்றும்
காரைக்கால் பகுதிகளில் ஓய்வூதியதாரர்கள் தங்கள் பென்ஷனை பெற்று வரும் யூகோ
வங்கி, இந்தியன் வங்கிகள், சென்னையிலுள்ள தலைமை கணக்குகளை,
பென்ஷன்தாரர்களுக்கு வழியாக புதுச்சேரிக்கு õற்றப்படவேண்டும்.
புதுச்சேரி,காரைக்கால் கருவூலகங்கள் வங்கிகளில் பணம் எடுத்து
ஓய்வூதியதாரர்களுக்கு வங்கிகளின் வழியாக வழங்க வேண்டும். தற்போது பென்
ஷன்தாரர்கள் பெற்று வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.300ஐ, ரூ.1200 ஆக
உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
நிறைவேற்றப்பட்டன.தர்மராஜ் நன்றி கூறி னார்.
மதுபாட்டில்கள் கடத்தல்: ரூ. 2 லட்சம் அபராதம்
காரைக்கால் : உள்ளாட்சி தேர்தலுக்காக காரைக்காலில் இருந்து கடத்தி கொண்டு
சென்றபோது, போலீசாரிடம் சிக்கிய மதுபாட்டில் மற்றும் கடத்தலுக்குப்
பயன்படுத்திய காருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் வெளிபாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் தனது டி.என்.49 ஜே 4869
என்ற மாருதி காரில் கடந்த 25ம் தேதி காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி
சென்று கொண்டிருந்தார். கீழகாசாக்குடி அருகே சென்றபோது பின்னால் வந்த
பி.ஓய்.01 ஏ.டி.3454 என்ற எண்ணுடைய டாடா இண்டிகா கார் ஆனந்தன் கார் மீது
மோதியது. இதில் இரண்டு கார்களுக்கும் சேதம் ஏற்பட்டது.ஆனந்தன் அளித்த
புகாரின் போரில் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை சோதனை
செய்தபோது, இண்டிகா காரில் 15 பெட்டிகளில் 660 குவாட்டர் பிராந்தி
மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 40 ஆயிரம்
ரூபாய். காரை ஓட்டி வந்த சிதம்பரம் சாத்தாங்குடி ஆயிப்பாடியைச் சேர்ந்த
கோபால்,40 என்பவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில் மற்றும்
கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் உள்ளாட்சி
தேர்தலில் வாக் காளர்களுக்கு வழங்குவதற்காக புதுச்சேரி சரக்கு கொண்டு
சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட
மதுபாட்டில்கள் மற்றும் காரை போலீசார் வருவாய்த்துறை சப்-கலெக்டர்
சந்திரசேகரிடம் ஒப்படைத்தனர்.புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு மது
பாட்டில்கள் கடத்தியதற்கு 1 லட்சம் ரூபாயும், கடத்தலுக்கு பயன்படுத்திய
காருக்கு 1 லட்சம் என 2 லட்சம் ரூபாய் சப்-கலெக்டர் சந்திரசேகர் அபராதம்
விதித்தார்


