/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அஞ்சல் வழியில் சம்ஸ்கிருதம் படிக்க நாளை சிறப்பு பதிவுஅஞ்சல் வழியில் சம்ஸ்கிருதம் படிக்க நாளை சிறப்பு பதிவு
அஞ்சல் வழியில் சம்ஸ்கிருதம் படிக்க நாளை சிறப்பு பதிவு
அஞ்சல் வழியில் சம்ஸ்கிருதம் படிக்க நாளை சிறப்பு பதிவு
அஞ்சல் வழியில் சம்ஸ்கிருதம் படிக்க நாளை சிறப்பு பதிவு
ADDED : அக் 05, 2011 02:03 AM
கோவை : சம்ஸ்கிருத பாரதி சார்பில், அஞ்சல் வழியில் சமஸ்கிருதம் படிக்க விரும்புவோருக்கான சிறப்பு பதிவு நாளை நடக்கிறது.இது குறித்து சம்ஸ்கிருத பாரதியின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் அனந்த கல்யாணகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் கோவை கிளை டாடாபாத்தில் இயங்கி வருகிறது.
இதன் மூலம் அஞ்சல் வழியில் சம்ஸ்கிருத சான்றிதழ் மற்றும் குழந்தைகளுக்கான பாலகேந்திரா வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அஞ்சல் வழி வகுப்பில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சம்ஸ்கிருதம் படிக்கலாம். இரண்டு வருடத்திற்கான இப்பாடத்திட்டத்தில் 6 மாதத்திற்கு ஒரு முறை தேர்வுகள் நடத்தப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. அதற்கான தொடர்பு வகுப்புகள் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் நடக்கின்றன. குழந்தைகளுக்கான பாலகேந்திரா வகுப்பில் 6 முதல் 13வயது வரையுள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். கோவையில் வகுப்புகள் பாப்பநாயக்கன்பாளைம், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ளன. இதற்கான சிறப்பு பதிவு மையம் ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் மண்டபத்தில் நாளை மாலை 5 முதல் 7 மணி வரை செயல்படும்.அதே வேளையில் அமைப்பு சார்பில் சிறப்பு விஜயதசமி பூஜையும் நடக்கிறது.விபரங்களுக்கு 97900 97542, 90425 07000 என்ற எண்களில் அழைக்கலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


