/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம்குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம்
ADDED : ஜூலை 25, 2011 11:12 PM
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின ஊர்வலம் நடந்தது.தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கோஷங்கள் எழுப்பியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.அதன்பின் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் நடராஜன் ஆகியோர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.


