/உள்ளூர் செய்திகள்/மதுரை/இலை சுருட்டு புழு தாக்குதல் விவசாய அதிகாரி யோசனைஇலை சுருட்டு புழு தாக்குதல் விவசாய அதிகாரி யோசனை
இலை சுருட்டு புழு தாக்குதல் விவசாய அதிகாரி யோசனை
இலை சுருட்டு புழு தாக்குதல் விவசாய அதிகாரி யோசனை
இலை சுருட்டு புழு தாக்குதல் விவசாய அதிகாரி யோசனை
ADDED : அக் 04, 2011 12:44 AM
சோழவந்தான் : சோழவந்தானில் இலை சுருட்டு புழு, குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
சோழவந்தான் பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலங்களில் ஏ.டி.டி.,36, 45, ஏ.எஸ்.டி.16 குறுகிய கால ரக நெல் விதைகள் பயிரிடப்பட்டு உள்ளன. வானம் மப்பும்மந்தாரமுமாக உள்ளதால், நெற்பயிரில் இலை சுருட்டு புழு, குருத்துப்பூச்சி தாக்குதல் தென்படுகிறது. நெற்கதிரில் இலைகள் கருகி காய்ந்து காணப்படும். வாடிப்பட்டி வேளாண் கோட்ட உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, ''நெற்பயிரை பாதுகாக்க நிலத்தில் 5 செ.மீ.,அளவில் தண்ணீரை தேக்க வேண்டும். பின் குளோரிபைரிபாஸ் 600 மி.லி., மோனோகுரோட்டோபாஸ் 400 மி.லி., குயினல்பாஸ் 400 மி.லி., இந்த மருந்தில் ஏதாவது ஒன்றினை ஒரு ஏக்கர் நிலத்தில் தெளித்தால், பூச்சியை கட்டுப்படுத்தி, கூடுதல் மகசூல் பெறலாம், யோசனை தெரிவித்தார்.


