/உள்ளூர் செய்திகள்/சேலம்/கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து மேட்டூருக்கு 27,500 கனஅடி உபரி நீர்திறப்புகபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து மேட்டூருக்கு 27,500 கனஅடி உபரி நீர்திறப்பு
கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து மேட்டூருக்கு 27,500 கனஅடி உபரி நீர்திறப்பு
கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து மேட்டூருக்கு 27,500 கனஅடி உபரி நீர்திறப்பு
கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து மேட்டூருக்கு 27,500 கனஅடி உபரி நீர்திறப்பு
ADDED : ஆக 09, 2011 01:56 AM
மேட்டூர்: கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, விநாடிக்கு, 27 ஆயிரத்து
500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை நீர்வரத்து
படிப்படியாக அதிகரித்து வருகிறது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு
பருவமழை தீவிரம் அடைந்ததால் கர்நாடகா அணைகளின் நீர்வரத்து
அதிகரித்துள்ளது. நேற்று கே.ஆர்.எஸ்., அணைக்கு விநாடிக்கு, 30 ஆயிரத்து,
172 கனஅடி நீர்வந்தது. அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 16 ஆயிரத்து, 252
கனஅடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.
நேற்று அணை நீர்மட்டம், 122
அடியாகவும், நீர் இருப்பு, 45.600 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணை நிரம்ப
இன்னமும், 4 டி.எம்.சி., நீர் மட்டுமே தேவை. ஹேமாவதி அணைக்கு விநாடிக்கு,
18 ஆயிரத்து, 864 கனஅடி நீர்வந்தது. அணை நீர் இருப்பு, 34 டி.எம்.சி.,யாக
உயர்ந்துள்ளது. ஹேமாவதி நிரம்ப இன்னமும், 3 டி.எம்.சி., நீர் மட்டுமே
தேவை.கபினி, ஹேரங்கி அணைகள் நிரம்பி விட்டது. நேற்று கபினிக்கு விநாடிக்கு,
15 ஆயிரத்து, 500 கனஅடி நீர்வந்தது. அணையில் இருந்து விநாடிக்கு, 11
ஆயிரத்து, 250 கனஅடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. கே.ஆர்.எஸ்.,
கபினி இரு அணைகளில் இருந்தும் நேற்று விநாடிக்கு, 27 ஆயிரத்து, 500 கனஅடி
உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் விநாடிக்கு, 7,
233 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று மதியம் விநாடிக்கு, 18
ஆயிரத்து, 864 கனஅடியாகவும், மாலை, 23 ஆயிரத்து, 553 கனஅடியாகவும்
அதிகரித்தது.கூடுதல் நீர்வரத்த்தால் நேற்று மதியம், 77.420 அடியாக இருந்த
மேட்டூர் அணை நீர்மட்டம் மாலை, 77.630 அடியாக அதிகரித்தது.


