கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் மகன் பைக் விபத்தில் காயம்
கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் மகன் பைக் விபத்தில் காயம்
கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் மகன் பைக் விபத்தில் காயம்

ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான அசாருதீனின் இளைய மகன் அயாஜுதீன், பைக் விபத்தில் பலத்த காயமடைந்தார்.
அயாஜுதீனும், அவரது உறவினர் அஜ்மான் என்பவரும், சுசூகி ஸ்போர்ட்ஸ் பைக்கில், ஐதராபாத்தின் புறநகர்ப் பகுதியில், பப்பல்குடா சுங்கச்சாவடி அருகே, வெளிவட்டச் சாலையில், நேற்று காலை 9 மணி அளவில் சென்ற போது, விபத்தில் சிக்கினர்.இதில், பைக்கை ஓட்டிச் சென்ற அயாஜுதீன், பலத்த காயம் அடைந்தார். அவரின் பின்னால் அமர்ந்திருந்த அஜ்மான் இறந்தார். தலையில் பலத்த காயமடைந்த அயாஜுதீன், ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் கூறியுள்ளனர். 'பைக்கில் இருவரும், கச்சிபவுலி பகுதி நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த போது, விபத்து நிகழ்ந்துள்ளது' என, போலீசார் கூறியுள்ளனர்.ஐதராபாத்தில், ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் வெளிவட்டச் சாலையில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.


