/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் சிக்னலை சரி செய்ய கோரிக்கைவிழுப்புரம் சிக்னலை சரி செய்ய கோரிக்கை
விழுப்புரம் சிக்னலை சரி செய்ய கோரிக்கை
விழுப்புரம் சிக்னலை சரி செய்ய கோரிக்கை
விழுப்புரம் சிக்னலை சரி செய்ய கோரிக்கை
ADDED : ஆக 09, 2011 02:44 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பழுதடைந்துள்ள சிக்னலை சரி செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புரு÷ஷாத்தமன், நெடுமாறன், உசேன்கான் முன்னிலை வகித்தனர்.சமச்சீர் கல்வி திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பள்ளிக் கட்டணங்களை குறைக்க வேண்டும். விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து சிக்னல் வரை டிவை டர் அமைக்க வேண்டும். பழுதடைந்துள்ள சிக்னலை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் ரத்தினராஜ், நாகராஜன், சக்திவேல், விஸ்வநாதன், கலியபெருமாள் கலந்து கொண்டனர். மாவட்ட இணை செயலாளர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.


