ADDED : செப் 17, 2011 10:02 AM
ஆமதாபாத்: அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி மாநில முதல்வர் நரேந்திர மோடி குஜராத் பல்கலை கழக வளாகத்தி்ல மூன்று நாள் உண்ணாவிரதத்தை இன்று துவக்குகிறார்.
இதற்கு போட்டியாக சபர்மதி ஆசிரமத்தில் காங்கிரஸ் கட்சியும் உண்ணாவிரதத்தை நடத்துகிறது.காங்.,சார்பில் நடத்தப்படும் இந்த போட்டி உண்ணா விரதத்திற்கு சங்கர்சிங் வகேலா தலைமை வகிக்கிறார். மாநில முதல்வர் நரேந்திர மோடியின் நிர்வாக சீர்கேடை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.