/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கோபி நகராட்சியில் 10 நிமிடத்தில் முடிந்த வேட்பாளர்கள் கூட்டம்கோபி நகராட்சியில் 10 நிமிடத்தில் முடிந்த வேட்பாளர்கள் கூட்டம்
கோபி நகராட்சியில் 10 நிமிடத்தில் முடிந்த வேட்பாளர்கள் கூட்டம்
கோபி நகராட்சியில் 10 நிமிடத்தில் முடிந்த வேட்பாளர்கள் கூட்டம்
கோபி நகராட்சியில் 10 நிமிடத்தில் முடிந்த வேட்பாளர்கள் கூட்டம்
ADDED : அக் 11, 2011 02:34 AM
கோபிசெட்டிபாளையம்:கோபி நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் 10 நிமிடத்தில் முடிந்தது.
போதிய இடவசதி இல்லாததால் வேட்பாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.கோபி நகராட்சியில் தலைவர் பதவிக்கு ஏழு பேர், 30 கவுன்சிலர் பதவிக்கு 189 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நகராட்சியில் நேற்று நடந்தது.அரசியல் சார்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் பலர் கூட்டத்துக்கு வந்திருந்தனர். தேர்தல் அலுவலர் ஜான்சன், உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சியினரும் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நன்னடத்தைகளை தெரிவித்தார்.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரச்சாரத்தில் பயன்படுத்தும் வாகனங்களின் விபரங்களை, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்து அனுமதி பெற வேண்டும், அனுமதி பெறாத வாகனங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும். பிரச்சாரம் செய்யும் போது பாதுகாப்பு வாகனங்கள் உள்பட மூன்று வாகனங்கள் மேல் பயன்படுத்த கூடாது. அனுமதி பெறாத வாகனங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டால் இந்திய தண்டனை சட்டத்துக்கு உட்படுத்தப்படும். முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் விபரங்களை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டன.வேட்பாளர்களுக்குள் தகராறு வந்து விடக்கூடாது என பயந்த, தேர்தல் அலுவலர் ஜான்சன், விதிமுறையை படித்த 10 நிமிடத்தில் கூட்டத்தை முடித்துக் கொண்டார். நகராட்சி மன்ற கூடத்திலேயே, ஆலோசனை கூட்டம் நடந்தது. இடப்பற்றாக்குறையால் வேட்பாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.


