/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் ஐயப்பா ஆஸ்ரமத்தில் தேவ பிரசன்ன பூஜை இன்று துவக்கம்சேலம் ஐயப்பா ஆஸ்ரமத்தில் தேவ பிரசன்ன பூஜை இன்று துவக்கம்
சேலம் ஐயப்பா ஆஸ்ரமத்தில் தேவ பிரசன்ன பூஜை இன்று துவக்கம்
சேலம் ஐயப்பா ஆஸ்ரமத்தில் தேவ பிரசன்ன பூஜை இன்று துவக்கம்
சேலம் ஐயப்பா ஆஸ்ரமத்தில் தேவ பிரசன்ன பூஜை இன்று துவக்கம்
சேலம்: சேலம் ஐயப்பா ஆஸ்ரமத்தில், அஷ்டபந்த கலசாபிஷேக மகா கும்பாபிஷேக தேவ பிரசன்ன சிறப்பு பூஜைகள் இன்று துவங்கி, செப்டம்பர் 20ம் தேதி வரை நடக்கிறது.
செப்டம்பர் 18ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, ஐயப்ப ஸ்வாமியின் அகண்ட நாம ஜபம், சுக்ருத ஹோமம், பஞ்ச கவ்யம், சதுர் சுத்தி ஆகியனவும், மாலையில் விஷ்ணு சஹஸ்ர நாமம், பகவதி சேவை, ஹரிவராசனம் ஆகியவை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. செப்டம்பர் 19ம் தேதி காலை, மஹா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்குகிறது. மாலையில் விஷ்ணு சஹஸ்ர நாமம், சர்ப பலி பூஜை, பகவதி சேவை, ஹரிவராசனம் ஆகியவை நடக்கிறது.
செப்டம்பர் 20ம் தேதி காலை, மகா கணபதி ஹோமம், தில ஹோமம், விஷ்ணு பூஜை, 25 கலச பூஜை, பிராமணர்களுக்கு பாத பூஜை, வஸ்திரதானம் செய்து உணவு வழல்குதல், ஸ்ரீ பூத பலி ஆகியன நடக்கிறது. மாலையில் மகா தீபாராதனை, பகவதி சேவை, ஹரிவராசனம் ஆகியன நடக்கிறது. தேவ பிரசன்ன சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்பா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


