/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கைஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை
ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை
ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை
ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை
ADDED : செப் 07, 2011 12:54 AM
கூடலூர் : 'ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை
எடுக்கப்படும்,' என கூடலூர் டி.எஸ்.பி., எச்சரித்துள்ளார்.
கூடலூர்
போலீசார் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்
குறித்த விளக்க கூட்டம் ஜானகியம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்தில், கூடலூர் டி.எஸ்.பி., லட்சுமணன் பேசுகையில்,''கூடலூரில் சமையல்
எரிவாயு பயன்படுத்தி ஆட்டோக்கள் இயக்குவதாக புகார் உள்ளது. கண்டு
பிடிக்கப்பட்டால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். ஆட்டோ மற்றும்
ஓட்டுனர்கள் குறித்த ஆவணங்களை அரசு அதிகாரிகள் கையெழுத்துடன் வைத்திருக்க
வேண்டும். ஆவணங்கள் தணிக்கை செய்யும் வகையில், ஜெராக்சும் தெளிவாக இருக்க
வேண்டும். ஆட்டோக்களில் 13 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் 5 பேர் வரை
மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். ஆட்டோக்களை ஷேர் ஆட்டோவாக
பயன்படுத்தினாலும், அதிக கட்டணம் வசூல் செய்தாலும் நடவடிக்கை
எடுக்கப்படும். பேட்ஜ் இன்றி ஆட்டோ ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை
எடுக்கப்படும். 8ம் வகுப்பு படிக்காதவர்கள் பேட்ஜ் பெற முடியாத
நிலையுள்ளது. இவர்கள் போலீசாரை அணுகினால், 8ம் வகுப்பு தேர்வு எழுதி பேட்ஜ்
பெற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். கூட்டத்தில் மோட்டார் வாகன
ஆய்வாளர் விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர்கள் நீலகுமார், சத்தியமூர்த்தி,
இந்திராணி, ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.


